உங்களின் UAN கணக்கில் எப்படி KYC Update செய்வது? – முழுமையான வழிகாட்டி (2026)

நீங்கள் உங்களின் UAN கணக்கில் KYC அப்டேட் செய்ய விரும்புகிறீர்களா? ஒருவேளை ஆம் என்றால் அதை எப்படி அப்டேட் செய்வது? அப்படி அப்டேட் செய்வதால் என்ன நன்மைகள் கிடைக்கும்? போன்ற முழுமையாக தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.

உங்களின் PF பணத்தை எந்த ஒரு தடையுமின்றி எளிதாக எடுக்கவும் (PF Withdrawal), வேறு PF கணக்கிற்கு மாற்றவும் (PF Transfer) நினைத்தால், உங்களின் UAN கணக்கில் KYC (Know Your Customer) Update செய்திருப்பது மிக மிக அவசியமாகும். அவ்வாறு KYC அப்டேட் செய்தால் மட்டுமே உங்களால் PF சேவையை தடையின்றி பெற முடியும்.

நீங்கள் உங்களின் UAN கணக்கில் KYC Update செய்ய விரும்பினால், அதை நீங்களே UAN Member Portal மூலம் உங்கள் மொபைல் அல்லது கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி எளிதாக அப்டேட் செய்யலாம். இப்பொழுது அதை பற்றிய விவரங்களை காணலாம்.

PF கணக்கில் KYC Update செய்வது ஏன் முக்கியம்?

நீங்கள் உங்களின் UAN கணக்கை முழுமையாகப் பயன்படுத்த அதில் KYC அப்டேட் செய்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனெனில் இதனைச் செய்வதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள் பின்வருமாறு:

  • PF Claim Settlement: PF Advance, Full PF Settlement, மற்றும் Pension Withdrawal போன்ற எந்த ஒரு Online Claim செய்தாலும், KYC அப்டேட் செய்திருந்தால் மட்டுமே Claim செய்ய முடியும். இல்லையென்றால் உங்களால் PF பணத்தை Claim செய்து எடுக்க முடியாது.
  • TDS Tax பிடித்தம் தவிர்க்கப்படும்: நீங்கள் PF பணத்தை எடுக்கும்போது, உங்களின் PF Withdrawal பணம் Rs.50,000 ரூபாய்க்கு அதிகமாக இருந்து, உங்களின் சேவைக்காலம் 5 வருடங்களுக்கு குறைவாக இருந்தால், உங்களுக்கு 34.6% சதவீதம் Tax பிடிப்பார்கள். ஒருவேளை நீங்கள் உங்களின் UAN கணக்கில் PAN Card யை Update செய்திருந்தால் 10% மட்டுமே Tax பிடிப்பார்கள்.
  • PF Transfer: பழைய நிறுவனத்தில் இருந்து புதிய நிறுவனத்திற்கு PF தொகையை மாற்ற (Online PF Transfer) KYC கட்டாயம் அப்டேட் செய்திருக்க வேண்டும்.

நீங்கள் KYC இல் எதை Update செய்ய முடியும்?

UAN Portal-ல் நீங்கள் நேரடியாக உங்களின் Bank Account Details அதாவது Bank Account Number, IFSC Code போன்ற விவரங்களை Update செய்ய முடியும். இரண்டாவதாக PAN Card விவரங்களை KYC-யில் அப்டேட் செய்ய முடியும். இவை இரண்டையும் நீங்கள் கண்டிப்பா அப்டேட் செய்ய வேண்டும்.

அதில் கூடுதலாக உங்களின் Passport விவரங்களையும் அப்டேட் செய்யும் வசதி இருக்கும். ஆனால் அது கட்டாயமில்லை. உங்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டும் Passport விவரங்களை அப்டேட் செய்யாலாம்.

குறிப்பு: உங்களின் Aadhaar Card விவரங்களை நீங்கள் நேரடியாக அப்டேட் செய்ய முடியாது. ஆதார் இணைப்பை உங்களின் நிறுவனம் (Employer) மட்டுமே அவர்களின் Employer Portal மூலமாகச் செய்ய முடியும்.

UAN Portal-ல் KYC அப்டேட் செய்வதற்கான முழுமையான படிகள் (Steps)

உங்களின் UAN KYC இல் பின்வரும் படிகளை பின்பற்றி உங்களின் Bank மற்றும் PAN விவரங்களை அப்டேட் செய்யலாம்.

Step 1: உங்கள் Browser-ல் unifiedportal-mem.epfindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ UAN Member Portal இணையதளத்திற்குச் செல்லவும்.

Step 2: உங்களின் 12 இலக்க UAN Number, Password மற்றும் திரையில் தோன்றும் Captcha Code-ஐ டைப் செய்து Sign In பட்டனைக் கிளிக் செய்யவும்.

Step 3: UAN கணக்கை Login செய்த பிறகு, மேலே உள்ள மெனுவில் இருக்கும் Manage என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்யுங்கள். அதில் தோன்றும் Drop-down மெனுவில் KYC என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

Step 4: இப்போது திறக்கும் புதிய பக்கத்தில் Bank, மற்றும் PAN போன்ற ஆப்ஷன்கள் இருக்கும். நீங்கள் எதை அப்டேட் செய்ய வேண்டுமோ அதைத் தேர்ந்தெடுக்கவும்.

  • Bank Account-ஐ இணைக்க: Bank என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் Account Number-ஐ இரண்டு முறை சரியாகப் பதிவிடவும். பின்னர், வங்கியின் IFSC Code-ஐ உள்ளிட்டு ‘Verify IFSC’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • PAN Card-ஐ இணைக்க: PAN என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்களின் 10 இலக்க PAN Number மற்றும் பான் கார்டில் உள்ளபடி உங்களின் பெயரையும் (Name as per PAN) சரியாக டைப் செய்யவும்.

Step 5: நீங்கள் விவரங்களைச் சரியாகப் பூர்த்தி செய்த பின், கீழே உள்ள செக்பாக்ஸை (Consent Box) டிக் செய்துவிட்டு Save என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.

Step 6: நீங்கள் Save என்பதை கிளிக் செய்த பிறகு உங்களின் ஆதார் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP Number வரும். அதை Enter செய்து Submit செய்யவும்.

Step 7: நீங்கள் Submit செய்தவுடன் உங்களின் கோரிக்கை KYC Pending for Approval என்ற பகுதிக்குச் சென்றுவிடும். இப்போது, உங்களின் Bank Account Details Update கோரிக்கை NDC அதாவது National Data Center க்கு செல்லும். அங்கு அவர்கள் உங்களின் வங்கிக்கணக்கு தகவல்களை சரிபார்த்து Approve செய்வார்கள்.

ஆனால் உங்களின் PAN Update கோரிக்கை உங்களின் தற்போதைய நிறுவனத்திற்கு (Employer / HR) செல்லும். அந்த நிறுவனம் அந்த கோரிக்கையை தங்களின் Digital Signature மூலமாக Approve செய்வார்கள்.

KYC Update-ல் பொதுவாக வரும் பிரச்சினைகளும் தீர்வுகளும்

  • Pending for Approval: நீங்கள் உங்களின் PAN Number யை KYC யில்அப்டேட் செய்து பல நாட்கள் ஆகியும் Pending என்றே இருந்தால், நீங்கள் உடனடியாக உங்கள் நிறுவனத்தின் HR ஐத் தொடர்புகொண்டு Approve செய்யும்படி கேட்க வேண்டும்.
  • ஒருவேளை KYC யில் Bank Account Update கோரிக்கை Pending இல் இருந்தால், அதை Approve செய்யும்வரை காத்திருக்க வேண்டும். ஏனெனில் அது NDC மூலம் மட்டுமே சரிபார்த்து Approve செய்வார்கள்.
  • Name Mismatch: உங்கள் வங்கிக்கணக்கில் உள்ள பெயரும், PF கணக்கில் உள்ள பெயரும் சிறு எழுத்துப்பிழை இல்லாமல் (Spelling Mismatch) ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் Bank Update கோரிக்கை Reject செய்யப்படும்.
  • Wrong IFSC Code: Bank Account இணைக்கும்போது IFSC Code தவறாக இருந்தால், அப்பொழுதும் உங்களின் Bank Update கோரிக்கை Reject செய்யப்படும்.

முடிவுரை

உங்களின் PF கணக்கைப் பொறுத்தவரை, முன்பே KYC Update செய்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் KYC அப்டேட் செய்தால், அது உடனடியாக அப்டேட் ஆகாது. அது அப்டேட் ஆக சில நாட்கள் ஆகும். எனவே நீங்கள் முன்பே KYC அப்டேட் செய்து வைத்துக்கொள்வது சிறந்தது. அப்போது தான் நீங்கள் அவசரமாக PF Withdrawal செய்ய நினைக்கும்போது எந்த சிக்கலும் இல்லாமல் உடனடியாக PF Claim Request யை கொடுக்க முடியும்.

Leave a Comment